ராதிகா வீட்டில் கண்ட நேரத்தில் தங்கும் கோபி.., கேவலமாக கிழிக்கும் ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புதுவராவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி களமிறங்கியுள்ள நேரத்தில் கோபி வந்து செல்வதை சந்தேகமாக பார்க்கிறார். அதுமட்டுமில்லாமல் கோபி வீட்டிற்கு லேட்டாக வருவதை பார்த்து ராமமூர்த்தி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து கொண்டுள்ளது. ராதிகா வீட்டில் இரவு நேரத்தில் வரும் கோபியை பார்த்து ராதிகாவின் அம்மா சந்தேகப்படுகிறார். எதற்கு இந்த நேரத்தில் வரணும் என்று கண்டபடி கேள்வி கேட்கிறார்.

ஒரு கட்டத்தில் ராதிகா சமாளித்து விட வீட்டிற்கு வரும் கோபியிடம் அவரது அப்பா ராமமூர்த்தி கேள்வி கேட்கிறார். என்ன இவளோ நேரம் என்று கேட்கிறார். ஆபீஸில் வேலை என்று சமாளிக்கிறார். ஆபீஸில் கால் செய்தபோது நீ இல்லை என்று சொன்னதாக சொல்ல இதனால் கோபி உச்சகட்ட கோவமடைகிறார்.

ஆர்யன் கான் வழக்கின் விசாரணை அதிகாரி அதிரடி நீக்கம் – வெளியான பகிர் காரணம்!!

என் வயசு இப்போ என்ன?? இப்பவும் என்ன கண்காணிக்கிறீங்க?? அதுவும் என் பிள்ளைங்க இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கு அப்பறமும் என்ன இவ்வளவு கேள்வி கேட்குறீங்க என்று சத்தம் போடுகிறார். அதுமட்டும்மில்லாமல் ராதிகா வீட்டிற்கு பாக்கியா சாப்பாடு கொடுக்க செல்ல அப்பொழுது ராமமூர்த்தி வந்து தான் செல்வதாக சொல்கிறார்.

இன்னைக்கு ராதிகாவிடம் பேசியே ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் கோபி அவரை போக விடாமல் தடுக்கிறார். இதனால் பயந்துபோகும் பாக்கியா தானே ராதிகா வீட்டிற்கு செல்வதாக சொல்கிறார். அதன் பிறகு கோபியிடம் தனியாக பேச செல்கிறார் ராமமூர்த்தி. இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here