இவ்வளவு தப்பு செஞ்சும் திருந்தாமல் பாக்கியாவை பழிக்கும் கோபி.., ராதிகாவை பார்க்க செல்லும் ஈஸ்வரி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பாக்கியா புதுமை பெண்ணாக இறங்கி கோபிக்கு விவாகரத்து கொடுக்க கிளம்பி விட்டார். வீட்டில் உள்ளவர்கள் பாக்கியாவிடம் அவ்வளவு கெஞ்சியும் கேட்பதாக இல்லை. செழியனுக்கும் அம்மாவின் நிலைமையை நினைத்து ஒரு மாதிரியாக ஆகிறது. ஜெனியிடம் புலம்பி கொண்டுள்ளார்.

என்ன பண்றதுனே தெரியல, இந்த எழில் தான் அம்மாவை இப்படி ஏத்தி விடுறான் என்று கோவப்படுகிறார். அதற்கு ஜெனி ஆண்டிக்கு வந்த நிலைமை யாருக்குமே வர கூடாது என்று சொல்கிறார். அடுத்ததாக இனியா உட்கார்ந்து அழுதுகொண்டே உள்ளார். அப்பொழுது ஜெனி வந்து சமாதானம் செய்கிறார்.

அப்பா ஒன்னா இருக்கணும்னு தான் ஆசை படுறாரு, ஆனால் அம்மா தான் அடம் பிடிக்கிறாங்க. இனிமேல் நானும் அம்மா இல்லாமல் தான் இருக்கணுமா?? நான் சின்ன பொண்ணு தானே எனக்காக அம்மா யோசிக்க கூடாதா?? என்று அழுகிறார். ஜெனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ஆனால் கோபி இப்பொழுது கூட திருந்தாமல் பாக்கியா மீதே வன்மத்தை கொட்டி கொண்டுள்ளார். இதனை நாள் ஒரு மகனா, ஒரு அப்பாவா எவளோ செஞ்சு இருக்கேன். இவளுக்கு விவாகரத்து கொடுக்க நான் அவளோ யோசிச்சேன். ஆனால் இவை இரண்டு நாளில் எனக்கு டக்குனு விவாகரத்து கொடுக்குறா?? எவளோ திமிரு இவளுக்கு, விவாகரத்து தானே வேணும் உனக்கு வந்து தரேன் என்று சொல்கிறார் கோபி. மேலும் பிரச்னையை சரி செய்ய செல்வியை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார் ஈஸ்வரி

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here