கண்ணாடி போன்ற சேலையில் போட்டோஷூட் நடத்திய பாக்கியலட்சுமி நடிகை – அப்பப்பா என்ன ஒரு கிளாமர்…,!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா தற்போது சேலையில் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி திவ்யா

விஜய் டிவியில் பாக்யலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஜெனி மற்றும் செழியனை வைத்து தான் சீரியலில் கதை ஓடிக்கொண்டுள்ளது. செழியன் வீட்டிற்கு தெரியாமல் ஃபிளாட் வாங்க அந்த விஷயத்தை தெரியாமல் ஜெனி குடும்பத்தில் சொல்ல அனைவர்க்கும் ஒரு மாதிரி ஆகிறது.

செழியனின் பாட்டி வீடு ரெண்டாகி விடுமோ என்று பயப்படுகிறார். இதனால் கடுப்பாகும் செழியன் ஜெனியிடம் எரிந்து விழுகிறார். இத்தனை நாட்கள் வீட்டில் கட்டி காப்பாற்றி வந்த மரியாதையை இப்படி ஒரே நாளில் உடச்சுட்டியே என்று கோவப்படுகிறார்.

இத்தனை நாட்கள் ஜெனிக்கும் செழியனுக்கும் அவ்வளவாக கதைக்களம் இருந்ததே இல்லை. இப்பொழுது தான் செழியனை வைத்து சில காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஜெனிக்கும் கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஜெனியாக நடித்து வருபவர் தான் திவ்யா கணேசன். இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் தான் பல சீரியல்களில் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

dhivya ganesan
dhivya ganesan

மாமியாரை அனுசரித்து செல்லும் ஜெனி கதாபாத்திரத்தால் இவருக்கும் ரசிகர்கள் அதிகமானார்கள். தற்போது அவர் பச்சை நிற சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here