பாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கதையம்சத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தங்களது ஒரு வருட பயணத்தை அந்த சீரியல் குழு கொண்டாடியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மறுபடியும் கோபி எழிலிடம் மாட்டி கொள்கிறார். ஹோட்டலில் ராதிகாவும், கோபியும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இதனால் என்னென்ன பிரச்சனை வர போகிறது என்றும் தெரியவில்லை.

இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே கோபியால் தான் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் எழில் அமிர்தா ஜோடி எப்பொழுது சேருவார்கள் என்றும் பலரும் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. பாரதி கண்ணம்மாவையே ஒரு காலகட்டத்தில் பின்னுக்கு தள்ளியது இந்த பாக்கியலட்சுமி சீரியல் தான்.

கோபி ராதிகா கையில் எப்பொழுது சிக்க போகிறார் என்று ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த சீரியலுக்கு தனி ரசிகர்களுக்கு கூட்டமே உருவானது. இந்நிலையில் ஒரு வருடத்தை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here