பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் எழில்.., இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் எழில்.., இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் எழில்.., இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர்கள் பலரும் தங்களது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் இந்த கதையோடு ஒன்றி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். கோபி, ராதிகா, பாக்கியா, ஈஸ்வரி, இனியா, எழில் என அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்களின் பேவோரைட்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிலும் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் தான் பலரின் கனவு நாயகன். தனது அம்மாவுக்காக அவர் படும் பாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்படி ஒரு மகன் நமக்கு கிடைத்து விட மாட்டாரா? என்று ஏங்கும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படி இருக்க இப்பொழுது விஷால் இந்த சீரியலை விட்டு விலக போவதாக கருத்துக்கள் பரவி வருகிறது.

அதாவது சில காலமாகவே எழில் கதாபத்திரம் அவ்வளவாக காட்டப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் விஷால் ஹேர்ஸ்டைல், கெட்டப் அனைத்தையுமே மாற்றி விட்டார். இதனால் தான் இவருக்கு படவாய்ப்பு கிடைத்து இருக்கலாம் என்றும் சீரியலை விட்டு கூடிய சீக்கிரம் விலக போகிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here