பல தடங்கல்களை தாண்டி சமையலை முடித்து கெத்து காட்டிய பாக்கியா – தரமான சம்பவங்களுடன் வெளியான ப்ரோமோ!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிக சிரமத்திற்கு பின் பலரிடம் பேச்சு வாங்கி கடைசியாக சாதனை படைத்து விட்டார் பாக்கியா. அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி 1000 பேருக்கு சமைக்கும் சமையல் ஆர்டரை வாங்கி விட்டு படாத பாடுபட்டார். இந்நிலையில் கோபி இந்த ஆர்டர் மூலம் அசிங்கப்பட்டு நிற்க போகிறாய் என்று சொல்கிறார். எழில் தான் அனைத்து விஷயங்களிலும் பக்கபலமாக இருந்து உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அனைத்து சமையல்களையும் பக்குவமாக பாக்கியா செய்து கொண்டுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் வந்து தேவையில்லாமல் எதற்கு என் மனைவியை சமைக்க சொன்னிங்க என்று சத்தம் போடுகிறார். இதனால் கோவமடையும் கோபி இந்த அசிங்கம் தேவையா?? என்று கூறுகிறார்.

மேலும் சமைத்து முடித்து ஒரு வழியாக வண்டியில் சாமான்களை ஏற்றுகின்றனர். ஆர்டர் கொடுத்தவர்கள் அனைவரும் பாக்கியாவிற்காக காத்து கொண்டுள்ளனர். அப்பொழுது பாக்கியா சரியான சமயத்திற்கு வந்து விடுகிறார். மேலும் சமையலை சாப்பிட்டு அனைவரும் பாராட்டுகின்றனர். பாக்கியா கெத்தாக நடந்து வர ’36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற வாடி ராசாத்தி பாடல் பின்னால் இசைக்க ப்ரோமோ வெறித்தமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here