தன் 6 மாத தங்கையை போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி இனியா – குழந்தையின் சிரிப்பில் மெய்மறந்த ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி இனியா

வாணி ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நேகா. சிறு வயதிலேயே தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ராதிகாவுக்கு இணையாக அந்த சீரியலில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் சின்ன பெண்ணாக இருந்தாலும் அவரது நடிப்பு அவரை உயர்த்தி தான் காட்டியது.

சீரியல் முடிவடையும் தருவாயில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இந்நிலையில் தான் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்தது. சித்தி 2 சீரியலிலும் நேகா நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

nega

அதனால் சித்தி 2 சீரியலை விட்டு விலகி இருந்தார். தற்போது இனியாவாக அனைவரின் நெஞ்சத்திலும் பதிந்து விட்டார் நேகா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் தங்கை பிறந்தார். 16 வயதான இவருக்கு இப்பொழுது தங்கச்சி பாப்பாவா?? என்று பலரும் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கும் பதிலடி கொடுத்தார். தனது 6 மாத தங்கைக்கு போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here