‘தயவு செஞ்சு என்ன ஷிவாங்கியோட ஒப்பிடாதீங்க’ – கொந்தளிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கடைசி மகளாக நடிக்கும் இனியா தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி இனியா

பாக்கியலட்சுமியில் நடிக்கும் இனியா சிறு வயதில் இருந்தே பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அவர் சன் டிவியில் வெளியான ‘வாணி ராணி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். மிகவும் சிறு குழந்தையாக கொஞ்சும் நடிப்பும் அனைவரையும் கொள்ளைகொண்டார். இந்த சீரியலில் 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தையாக இருந்த நேகா பெரியவள் ஆகும் வரை அந்த சீரியலில் நடித்திருந்தார். தற்போது கொழுக் மொலுக்காக இருக்கும் நேகா சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே இங்கே வந்து விட்டார். தொடர்ந்து அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து கொண்டு தான் உள்ளனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இவரை வைத்து தான் கதையே அப்படி இருக்க தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரோலுக்கு பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடக்க ஒடுக்கமான முல்லையை பார்த்திருப்பீங்க, இப்படி ஒரு முல்லையை பார்த்து இருக்கீங்களா?? வைரலாகும் போட்டோஸ்!!

அதாவது ஷிவாங்கியையும் இவரையும் வைத்து ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதற்கு பலரும் ஷிவாங்கியோட நேகாவை ஒப்பிடாதிங்க என்று பலவாறு கூறியுள்ளனர். இதனால் கடுப்பான நேகா தன்னை ஷிவாங்கி உடன் தயவு செய்து ஒப்பிட வேண்டாம். ஷிவாங்கியை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப புடிக்கும். அவங்க வேற லெவல். இப்படி கம்பேர் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here