இனியா – ராதிகா இடையே வெடித்த உச்சகட்ட சண்டை.., அல்லோல்படும் கோபி.., பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

0
இனியா - ராதிகா இடையே வெடித்த உச்சகட்ட சண்டை.., அல்லோல்படும் கோபி.., பாக்கியலட்சுமி ப்ரோமோ!!
இனியா - ராதிகா இடையே வெடித்த உச்சகட்ட சண்டை.., அல்லோல்படும் கோபி.., பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபியின் ஆட்டத்தை அடக்குவதற்காக அவரது அப்பா ராமமூர்த்தி ராதிகாவுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் கோபிக்கு இவர்கள் இருவரையும் சமாளிப்பதே போதும் போதும் என்றாகி விடுகிறது. இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ராதிகா இனியாவுக்காக காபி போட்டு வைத்துள்ளார். ஆனால் இனியா குடிக்கவில்லை. அப்போது ராதிகா வந்து காபியை குடி என்று சொல்ல எனக்கு காபி பிடிக்காது, நீங்க எதுக்கு என்கிட்ட பேசுறீங்க, உங்களைப் பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்கல? என கத்துகிறார். அப்போது பார்த்து கோபி வர என்ன இங்க பிரச்சனை என கேட்கிறார்.

குழந்தை விஷயத்தில் ஸ்ரேயா போட்ட முக்கிய கண்டிஷன்.., சித்து நிலைமை ரொம்ப பாவம் தான்!!

ராதிகா நான் காபி போட்டு வச்சிருக்கேன் இனியா குடிக்கல என கம்ப்ளைன்ட் செய்கிறார். உடனே கோபி அவளுக்கு தான் காபி பிடிக்காது என சொல்ல அதற்கு ராதிகா அவளுக்கு என்னையும் தான் பிடிக்கல என கோபத்துடன் சண்டை போடுகிறார். பிறகு கோபி இனியாவை சமாதானப்படுத்த உடனே அவர்களுக்காக என்கிட்ட ஏன் பேசுகிறீங்க? என இனியா சண்டை போடுகிறார். இறுதியில் உங்களுக்கு நான் முக்கியமா?? அவங்க முக்கியமா?? என கேட்க கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் கோபியின் உண்மை முகத்தை கண்டறிந்து இனியா பாக்யாவிடம் சென்று விடுவார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here