பஃப் வச்ச கையுடன் லேசான சேலையில் கவர்ச்சி தரிசனம் அளித்த ஜெனி – திணறிப்போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான திவ்யா கணேசன் தற்போது சேலையில் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ஜெனி

ஜீ தமிழில் வெளியான லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் திவ்யா கணேசன். அதன் பிறகு பல சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இவர் அடியெடுத்து வைத்ததும் தான் அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. செழியனுக்கு ஜோடியாக நடித்து வரும் ஜெனி தனது மாமியார் மீதும் அதிக அன்புடன் நடந்து கொள்கிறார்.

பாக்கியாவை வீட்டில் உள்ள அனைவருமே கண்டுகொள்ளாமல் இருக்க ஜெனி தான் எழில் இல்லாத நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். சீரியல் மூலம் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

இவருக்கும் பிரபல வில்லன் நடிகர் ஏ.கேவும் திருமணம் செய்ய போவதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் திடீரென ஏ.கே ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த திவ்யா கணேசன் தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் படவாய்ப்புக்கு அடிபோட்டு வருகிறார். முன்னணி கதாநாயகிகளையே மிஞ்சும் அளவிற்கு அவர் போட்டோஷூட் செய்து வருகிறார். இந்நிலையில் சூப்பரான சேலையில் ஆளை மயக்கும் அளவிற்கு போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here