உங்க வேலைய நீங்க பாருங்க, என் வேலைய நான் பாக்குறேன்…, தளபதி ரேஞ்சுக்கு களத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி எழில்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது தளபதி விஜயின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல என்று கமன்ட் செய்தும் வருகின்றனர்.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி அட்டகாசங்களால் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல கூடாது என்பதற்காக அனைவரையும் அழைத்து மதுரைக்கு சென்று விட்டார். அங்கு பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இணைந்து இருக்க அனைவருக்கும் பெரிய ஷாக் தான்.

மேலும் ராதிகா வேறு கால் செய்து பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு அழைக்க கோபி வேறு ஒரு மாஸ்டர் பிளான் போட எழிலுக்கு நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்து வருகிறது. எழில் இந்த அளவிற்கு பதறுவதற்கு காரணமே தன் அம்மாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

ஏற்கனவே தன் அம்மா படும் அவஸ்தையை தினமும் பார்த்து கொண்டு தான் உள்ளார். அதனால் தான் ராதிகாவின் கணவர் ராஜேஷ் வீட்டில் வந்து மிரட்டி பின்னும் அமைதியாக இருந்தார். அம்மாவுக்கு தெரிந்தால் நொறுங்கி போய் விடுவார் என்றும் அமைதியாக இருந்து விட்டார்.

கோபியும் எப்படியோ சமாளித்து விட்டு மறுபடியும் ராதிகா பின்னால் தான் சுற்றிக்கொண்டுள்ளார். அம்மாவுக்காக இவ்வளவு பாடுபடுவதால் தான் எழிலை அனைவர்க்கும் பிடித்து போனது. இந்நிலையில் எழில் மதுரையில் தற்போது தங்கி இருக்கும் வீட்டில் விஜய் பாணியில் செய்த ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here