இது தளபதி விஜய்யா அல்லது பாக்கியலட்சுமி எழிலா?? என்னமா பின்றாரு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமான விஷால் தன் இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக்கி வருகிறார். தற்போதும் விஜய் பட பாணியில் ரீல்ஸ் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒரே சீரியலில் இவ்வளவு பெரிய ஆளாகி இருக்கிறாரே என்று பலரும் வியந்து தான் உள்ளனர். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரமும் நிஜ வாழ்க்கையும் பொருத்தி தான் போகிறது.

ஏனெனில் இவர் படித்தது இன்ஜினியரிங் தானாம். ஆனால் இவருக்கு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்று தான் ஆசையாம். இதே தான் கதையிலும். அதனால் தான் அதில் ஒன்றி நடிக்கிறாரோ என்னவோ.

மேலும் விஷாலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் தான் இன்ஸ்டாவிலும் நாளுக்கு நாள் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். அம்மாவுக்காக போராடும் ஒரு மகனாய் தன் செயலை சரியாக செய்து வருகிறார்.

எப்பொழுதுமே அம்மா மகன் பாசம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரைக்கும் ஒர்கவுட் ஆக தான் செய்கிறது என்பதற்கு இந்த சீரியல் சிறந்த உதாரணம். இப்படி மக்கள் மத்தியில் பெயர் வாங்கிய எழில் தற்போது சச்சின் படத்தில் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here