உச்சகட்ட கோவத்தில் கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோடு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோபியும், ராதிகாவும் ஒரே கல்யாண மண்டபத்திற்கு வருகின்றனர். கோபியின் நாடகம் அனைத்தும் தெரிந்து நொந்து போகிறார் ராதிகா.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் கோபியும் திருமண நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். கோபிக்கு நீண்ட நாட்கள் கழித்து உறவினர் நிகழ்ச்சிக்கு செல்வதால் யாரையும் அடையாளமே தெரியவில்லை. யார் வந்து பேசினாலும் புரியாமல் முழித்து கொண்டுள்ளார். அடுத்ததாக சாப்பிடலாம் என்று செல்கின்றனர்.

பாக்கியாவும் கோபியும் சாப்பிட்டு கொண்டிருப்பதை தூரத்தில் இருந்தே பார்த்து விடுகிறார். பாக்கியாவின் முகத்தை மட்டும் ராதிகா பார்க்கவில்லை. மேலும் அவர் கட்டியிருக்கும் சேலையை பார்த்து விட்டு அவருக்கு அப்பொழுது தான் நியாபகத்திற்கு வருகிறது. இது அன்னைக்கு நாம் வாங்கிய சேலை தானே என்று யோசிக்கிறார்.

அப்பொழுது தான் அவருக்கு அனைத்துமே நியாபகத்திற்கு வருகிறது. இத்தனை நாள் எல்லாமே பொய் சொல்லி ஏமாத்தி இருக்காரு என்று கண்கலங்குகிறார். அடுத்ததாக பாக்கியா வீட்டில் ஜெனியை சமாதானம் செய்ய பொட்கே வாங்கி அனுப்புகின்றனர்.

அதனை பார்த்த ஜெனி சந்தோஷமடைய அவரது அப்பா அதனை வாங்கி தூக்கி போடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைய அடுத்து வரும் எபிசோடில் ராதிகா வீட்டிற்கு கோபி செல்கிறார். அப்பொழுது ராதிகா உச்சகட்ட கோவத்தில் இருப்பதை பார்த்து என்ன விஷயம் என்றே தெரியாமல் நடுங்கி போகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here