விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்து வந்த வெற்றி பாதை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 300 எபிசோடுகளை தற்போது கடந்து சாதனை புரிந்துள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவும் கோபியும் முன்பை விட அதிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். பாக்கியா காலில் அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் அவரை கேவலமாக பேசி வருகிறார் கோபி. வீட்டு வேலை செய்ய கூட லாயக்கு இல்லையா?? என்று எடுத்தெறிந்து பேசுகிறார்.

எழில் ஊரில் இருந்து வர அம்மாவின் நிலையை பார்த்து அவரே அனைத்து வேலைகளையும் செய்கிறார். எழில் சிறிது நேரம் வெளியில் சென்ற சமயத்தில் ஈஸ்வரி மறுபடியும் வேலை வாங்க ஆரம்பித்து விட்டார்.

அந்த கால் வலியோடு பாக்கியா மறுபடியும் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் கோபியும், ராதிகாவும் பார்க்கில் தனியாக இருப்பதை போட்டோ எடுத்து விடுகிறார். இதனை வைத்து மிரட்டவும் ஆரம்பிக்கிறார்.

இப்படி சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் 300 எபிசோடுகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. ஆரம்பித்த இத்தனை நாட்களில் சீரியல் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here