ராதிகாவும் கோபியால் ஏமார்ந்து கொண்டிருப்பதை கண்டுப்பிடிக்கும் கோபியின் அப்பா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் அப்பா ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டு ஷாக்காகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்பொழுது ராதிகாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லலாம் என்று செல்கிறார். அங்கு கோபியை பற்றி விசாரிக்கிறார். ராதிகாவை கோவிலில் பார்த்தாக சொல்லி விஷயத்தை ஆரம்பிக்கிறார்.

அதன் பிறகு யார் அந்த பையன் என்று கேட்க அவர் என்னுடைய நண்பர் என்று சொல்கிறார். அதன் பிறகு பாக்கியாவின் கணவரை பார்த்து இருக்கீங்களா?? என்று கேட்கிறார். அதற்கு ராதிகா அவரை மட்டும் நான் பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். மேலும் கோபியை பற்றி எடுத்து சொல்கிறார்.

அப்பொழுது தான் கோபியின் அப்பாவிற்கு உண்மை தெரிகிறது. சின்ன வயதில் கோபி காதலித்தது இந்த பெண்ணை தான் என்று. அதன் பிறகு ராதிகாவிடம் நீ நினைக்கிற மாதிரி என்று சொல்ல வர அப்பொழுது மயூ தாத்தா என்று ஓடி வந்து கட்டிப்பிடிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here