‘நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற’ – பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சமையல் ஆர்டர் எடுத்ததற்காக கண்டபடி திட்டி விடுகிறார் கோபி. சப்போர்ட்டுக்கு வந்த எழிலும் சேர்த்து திட்டு வாங்குகிறார். மேலும் அமிர்தா பாக்கியாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்.

சென்னையில் மர்ம நபர் தீக்குளிப்பு – முதல்வர் வீட்டின் அருகே நடந்த பயங்கரம்!!

பாக்கியலட்சுமி

பாக்கியா முதன்முதலாக 1000 பேருக்கு சமைக்கும் ஆர்டரை எடுக்க இதனால் வீட்டில் பலரும் திட்ட ஆரம்பிக்கின்றனர். பாக்கியா இது தன்னால் முடியுமா?? என்று யோசித்து கொண்டுள்ளார். அப்பொழுது எழில் பக்கபலமாக இருக்க பாக்கியாவிற்கு புதிய தெம்பு வருகிறது.

'நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற' - பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
‘நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற’ – பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

இன்றைய எபிசோடில் ஆர்டர் கொடுக்கும் நபர் அட்வான்ஸ் பணம் எவ்வளவு வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா ஆர்டரை முடித்த பின்பு பணம் வாங்கி கொள்வதாக சொல்கிறார். ஆனால் அவர் வலுக்கட்டாயமாக செக் எழுதி கொடுக்கிறார். அதன் பின் வீட்டில் அந்த ஆர்டரை பற்றி சொல்கிறார்.

'நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற' - பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
‘நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற’ – பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

இதனால் கோவமடையும் கோபி கண்டபடி கத்துகிறார். மேலும் 1000 பேருக்கு சமைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று சொல்கிறார். எங்க அம்மாவால எல்லாம் முடியும் என்று எழில் பாக்கியாவிற்கு வக்காளத்து வாங்க அதற்கு ஈஸ்வரியும் சண்டைக்கு வருகிறார்.

இந்த ஆர்டர் தப்பா போச்சுன்னா எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமா?? என்று கேட்கிறார். நீ கண்டிப்பா சொதப்ப தான் போற, அசிங்கப்பட்டு நிக்க போற என்று சொல்கிறார். இதனால் பாக்கியா கதறி அழுகிறார். எழில் உன்னால் கண்டிப்பா முடியும் அம்மா என்று சொல்கிறார்.

'நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற' - பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
‘நீ இந்த ஆர்டரை முடிக்காம அசிங்கப்பட்டு நிக்க போற’ – பாக்கியாவை புண்படுத்தும் கோபி! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

அதுமட்டுமில்லாமல் அமிர்தா பாக்கியாவிற்கு உதவ முன் வருகிறார். மேலும் அக்கபக்கத்தினரிடமும் வரும் லாபத்தில் அனைவருக்கும் ஷேர் கொடுப்பதாக சொல்கிறார். அப்பொழுது கோபி உள்ளே வர பாக்கியாவின் செயலை நினைத்து ஆத்திரமடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here