’47 வயசுல எனக்கு எவன் வேலை கொடுப்பான்..’ இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் கோபி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பாக்கியா ஓரளவிற்கு நிம்மதியாக இருக்க இப்பொழுது கோபிக்கு பெரிய பிரச்சனை தலைதூக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியா பணத்தை தொலைத்து விட்டு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்ள எழில் இரவு பகல் தூங்காமல் பணத்தை காப்பாற்றி தர இப்பொழுது தான் நிம்மதியாக உள்ளார் பாக்கியா. கோபி பாக்கியாவை பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. வீட்டை விட்டே துரத்தும் அளவிற்கு சென்று விட்டார்.

இப்பொழுது பிரச்சனை எல்லாம் ஓரளவிற்கு முடிவடைந்துள்ளது. ஆனால் கோபி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அதாவது காலையில் வந்து பாக்கியா காபி கொடுக்க அப்பொழுது இனியா வந்து ஸ்கூல் பீஸ் கட்ட பணம் வேண்டும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி வந்து வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் என்று சொல்கிறார். கோபிக்கு அப்பொழுது தான் கையில் காசு இல்லை என்று தோன்றுகிறது. என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். ஆபீஸில் பணம் சுத்தமாக இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆள் ஆகிறார்.

ஆபீஸில் வேலை பார்ப்பவர்களை கண்டபடி திட்டுகிறார். இந்த வயசில் யார் எனக்கு வேலை கொடுப்பார்கள் என்று புலம்பி கொண்டுள்ளார். அப்பொழுது அமிர்தா வீட்டிற்கு வருகிறார். பணம் தொலைந்து போன விஷயம் எழில் சொல்லி தான் தனக்கு தெரியும் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.

மேலும் எழில் இருந்ததால் தான் நான் பொழைச்சேன். இல்லைனா என் கதி அவ்வளவு தான் என்று சொல்லி கண்கலங்குகிறார் பாக்கியா. அடுத்ததாக ஜெனிக்கு குழந்தை பிறக்கப்போவதை நினைத்து குடும்பம் மொத்தமும் சந்தோசத்தில் உள்ளது. ஆனால் செழியனுக்கு இதில் கொஞ்சம் கூட சந்தோஷமும் இல்லை. அடுத்ததாக இனியா இன்னும் ஸ்கூல் பீஸ் காட்டவில்லையா?? என்று கோபியிடம் கேட்கிறார். மறந்து விட்டதாக சொல்கிறார். நாளைக்கு கண்டிப்பாக கட்டிவிடுவதாக சொல்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here