‘பாக்கியா நீ இருக்கும்போது மத்தவங்க எனக்கு எதுக்கு’ – ராதிகாவை ஒதுக்கிய கோபி! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எழிலிடம் சிக்கிய பிறகு என்ன செய்வது என்று தவித்து கொண்டுள்ளார். மேலும் ராதிகா மீண்டும் கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்காமல் தவிர்க்கிறார்.

பாக்கியலட்சுமி

ராஜேஷ் வந்து கோபி பற்றிய அனைத்து உண்மைகளையும் எழிலிடம் போட்டு உடைக்கிறார். இதனால் கோவமடையும் எழில் கோபியிடம் சென்று சண்டையிடுகிறார். அம்மாவை மசாலா பிஸ்னஸ் பண்ண விடலைனா நான் என்ன பண்ணுவேனே தெரியாது என்று மிரட்ட கோபி வேறு வழி இல்லாமல் பாக்கியாவிடம் மீண்டும் மசாலா தொழிலை ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார்.

#RRvsKKR ஐபிஎல் போட்டி – தோல்வியில் இருந்து மீள போராடும் இரு அணிகள்!ஜெயிக்கப்போவது யார்??

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாகிறது. பாக்கியாவிற்கு இது கனவா நனவா என்றே தெரியவில்லை. எழிலிடம் நீ ஏதும் அப்பா கிட்ட பேசுனியா?? என்று கேட்க அவரும் அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார். ரூமில் கோபி புலம்பிக்கொண்டுள்ளார்.

அதாவது எழிலிடம் சொன்னதால் எதுவும் ஆகவில்லை. வேறு யாரிடமாவது சொல்லி இருந்தால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசிக்கிறார். அப்பொழுது ராதிகா வீட்டில் ராஜேஷ் மறுபடியும் குடித்து விட்டு வருகிறார். ராதிகாவும் அவரது மகளும் ரூமில் சென்று அடைத்து கொள்கின்றனர்.

ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கோபிக்கு கால் செய்கிறார். ராதிகாவின் காலை பார்த்து விட்டு எழில் நியாபகம் வர இனி ராதிகா சங்காத்தமே நமக்கு வேண்டாம் என்று நினைத்து கொள்கிறார். அப்பொழுது பாக்கியா ரூமுக்கு வர எழில் எதாவது சொன்னானா?? என்று பதட்டமடைகிறார்.

எதும் சொல்லவில்லை என்று சொன்னதும் தான் கோபிக்கு சந்தோஷமாகிறது. அடுத்ததாக ராதிகாவிடம் இருந்து மீண்டும் கால் வருகிறது. பாக்கியா கால் வருவதாக சொல்ல நீ இருக்கும்போது அந்த கால் எல்லாம் எனக்கு எதுக்கு என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகிறார். இவரா இப்படியெல்லாம் பேசுவது?? என்று திகைக்கிறார்.

அடுத்ததாக ராஜேஷ் வீட்டில் உட்கார்ந்தே விட்டார். இதனால் கடுப்பாகும் ராதிகா வெளியில் வந்து கத்தி வைத்து மிரட்டுகிறார். இதனால் ராஜேஷ் பக்கத்தில் உள்ள அனைவரையும் அழைக்கிறார். தன்னை கொலை செய்ய வருவதாக குற்றம் சாட்டுகிறார். மீண்டும் ராதிகா கோபிக்கு கால் செய்ய அதனை எடுக்க மறுக்கிறார் கோபி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here