‘அய்யப்பனும், கோசியும்’ தமிழ் ரீமேக் – பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்..!

0

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அய்யப்பனும், கோசியும்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அய்யப்பனும், கோசியும்:

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘அய்யப்பனும், கோசியும்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த கதிரவன் வாங்கி உள்ளார். ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ராணுவ வீரர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளருக்கு இடையே நடக்கும் மோதலை எதார்த்தமாக இப்படத்தில் காட்டி இருப்பார் இயக்குனர் சச்சி. ஜேக்ஸ் பிஜாய் இசையில் மலையாளத்தில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

எனவே தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் இணையான நடிகர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த தயாரிப்பாளர் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் தனுசை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் ஆர்யா நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது பொய்யான செய்தி என உறுதியாகி உள்ளது. மேலும் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here