ஆகஸ்ட் 5 ஆம் தேதி பூமிபூஜை நடைபெற இருக்கும் அயோத்தியா ராமர் கோவிலின் புகைப்படங்களை 3D வடிவில் டைம்ஸ் சதுக்கத்தில் மாபெரும் விளம்பர பலகைகளில் திரையிட திட்டமிடப்பட்டு உள்ளது.
அயோத்தி ராமர் கோவில்:
கடந்த 2019 ஆம் ஆண்டு அயோத்தி ராமர் கோவில் விவாகரத்திற்கு தீர்ப்பு வழங்க பட்டது. அதனை அடுத்து துரிதமாக செயல்பட்ட மத்திய அரசு பூமிபூஜைக்கான வேலைகளிலும் இறங்கியது. இப்படியாக இந்த கோவில் கட்டுவதற்கான பணிகள் வெகு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதன் தொடர்ச்சியாக, இந்த கோவிலுக்கான பூமிபூஜை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாநில முதலமைச்சருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டது. இந்த கோவிலை பற்றி பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தும் மத்திய அரசு எதையும் காதில் வாங்கவில்லை.
டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம்:
நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் புகைப்படங்களும், இந்த கோவில் படங்களும் 3D அமைப்பில் விளம்பரப்படுத்த திட்டமிடபட்டுள்ளது. இந்த விளம்பர பலகைகள் தான் உலகில் உள்ள மிகப்பெரிய விளம்பர பலகைகள் ஆகும்.
இந்த பலகைகள் 17,000 ஆதி நீளம் கொண்டது. இதில் தான், அயோத்தி கோவில் புகைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திரையிடப்பட உள்ளது. இந்த பலகைகளில் ” ஜெய் ஸ்ரீ ராம்” என்று ஹிந்தியிலும், ராமரின் புகைப்படங்கள், அயோத்தி கோவில் புகைப்படங்கள் திரையிடப்படும்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!
இது குறித்து பிரபல சமூகத் தலைவரும், அமெரிக்க இந்தியா பொது விவகாரக் குழுவின் தலைவருமான ஜெகதீஷ் செஹானி கூறுகையில்” இது வாழ்நாளில் ஒரு முறை நடைபெறும் நிகழ்வு ஆகும். திரையிடப்படும் பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடவும் திட்டமிட்டுள்ளோம், மேலும் இனிப்புகள் வழங்கவும் திட்டமிட்டு உள்ளோம். இந்த நாளிற்காக நாங்கள் அனைவரும் காத்து இருந்தோம், அது இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று நினைக்கவில்லை.” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.