Saturday, April 20, 2024

நாளை அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வெள்ளி நாணயம்!!

Must Read

நாளை நடைபெற இருக்கும் அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை விழாவில் பங்கேற்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக வெள்ளி நாணயம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில்:

உச்சநீதிமன்றம் சர்ச்சையான அயோத்தி ராமர் கோவிலுக்காக தீர்ப்பை வழங்கியது. அதில் ராமர் கோவில் கட்டலாம் என்று தெரிவித்து இருந்தது. அதனால் மத்திய அரசு அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியது.

அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அதன் பலனாக, நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமிபூஜை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் வெகுதீவிரமாக நடைபெற்று வந்தது.

விழா ஏற்பாடுகள்:

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னின்று பார்த்து வருகிறார். நேற்று தான் அங்கு சென்று நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ayodhya-temple-celebration
ayodhya-temple-celebration

பிரதமர் முதல் பல தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் பலமாக நடந்து வருகின்றது. உத்தர பிரதேஷ் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி வருவதால், ஒரு இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

அதனால், விழா நடக்கும் மேடையிலும் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிரித்தியா கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளி நாணயம் வழங்க திட்டம்:

invitation-of-ayodhya ramar-temple
invitation-of-ayodhya ramar-temple

இந்த விழாவில் கலந்து கொள்ள 150 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, அதில் குழந்தை ராமரின் படம் உள்ளது.

HDFC வங்கிக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்!!

silver-coin-ayodhya
silver-coin-ayodhya

இந்த அழைப்பிதழை நேற்று வெளியிட்டனர். தற்போது கூடுதலாக, விழாவில் பங்கேற்க இருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக இந்த விழா அனைவர் மத்தியிலும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -