அயோத்தி ராமர் கோயில் இதற்கு எல்லாம் தடை…, நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
அயோத்தி ராமர் கோயில் இதற்கு எல்லாம் தடை..., நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
கடந்த ஜனவரி 22ம்  தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புனித தளமாக கருதப்படும் இந்த அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில், இந்த ராமர் கோயிலில் சிலவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அயோத்தி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ராமர் கோயிலில் அமைந்துள்ள பஞ்ச கோசி மார்க் பகுதி முழுவதும் ராமாயணத்துடன் தொடர்புடைய புனித இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இக்கோயிலின் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றளவிற்குள் இடம்பெற்றுள்ள KFC, PIZZA HUT ஆகிய அசைவ உணவகங்கள் பெயர் மாற்றப்பட்டு முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே விற்கப்படுகின்றன. குறிப்பாக, 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் உள்ள உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என அயோத்தி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here