அயோத்தி ராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு!!

0

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி படங்கள் வெளியாகி உள்ளன. மாதிரி படங்களே இவ்வளவு பிரம்மாண்டமாக காட்சி அளிப்பதால் கோவில் கட்டி முடித்த பின் அனைவரும் அசந்து விடுவர் என பக்தர்கள் கூறி வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில்:

நீண்ட கால பிரச்சனைக்குப் பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) அதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக 175 முக்கிய தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் இதுவரை எங்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, RSS தலைவர் மோகன் பகவத், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு மட்டுமே மேடையில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையில் நடப்பதால் பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here