டாக்டரை தொடர்ந்து சிவாவின் அயலான் படத்திற்கு வந்த சோதனை – இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!!

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருந்த திரைப்படம் அயலான் இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. தற்போது இந்த நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இடைக்கால தடை:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மற்றும் யோகி பாபு, கருணாகரன் ஆகிய பல நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த நிறுவனம் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ், டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி கடன் வாங்கி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் அவர்கள், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தங்களிடம் பெற்ற 5 கோடி கடனை வட்டியுடன் திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிடாமல் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விடுத்து ஆணை பிறப்பித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here