#INDVSAUF.., இந்தியா தீட்டும் சதி திட்டம் – தோல்வியின் விரக்தியில் வீரர்கள் எடுத்த முடிவு!!

0
இந்தியா தீட்டும் சதி திட்டம் - தோல்வியின் விரக்தியில் வீரர்கள் எடுத்த முடிவு!!
இந்தியா தீட்டும் சதி திட்டம் - தோல்வியின் விரக்தியில் வீரர்கள் எடுத்த முடிவு!!

இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் மற்ற அணிகள் உதவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி அடுத்த போட்டியில் எடுக்கப் போகும் முடிவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிசிசிஐ அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடருக்கான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு தோல்விகளை சந்தித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை 90 சதவீதம் இழந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதத்தை சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்றால் மற்ற அணிகள் இந்திய அணிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தினால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை தொடர்ந்து நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய உள்ளதாக BCCI தெரிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் அனைவரும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என கேலி செய்து வருகின்றனர். அதாவது இதுவரை விளையாடிய இந்திய அணியில் ஒரு வீரருக்கு பதில் மாற்று வீரரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

அதில் அவேஷ் கான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மோசமாக பந்து வீசி உள்ளார். அதனால் அவேஷ் கானுக்கு பதில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக கலக்கிய தீபக் சகாருக்கு பிளையிங் லெவலில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், ஒரு பவுலராகவும் செயல்பட கூடியவர். மேலும் தீபக் சஹார் பந்து வீச்சில் நல்ல ஸ்விங் செய்யக் கூடியவர். எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற திட்டத்தை தீட்டி இந்திய அணி வீரர்களும், BCCI நிர்வாகமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here