உங்கள் கணினியின் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை விற்கும் ஆன்டி வைரஸ் – உஷார் மக்களே..!

0

நாம் நமது கம்ப்யூட்டரில் இணையதளத்தில் தேடும் அனைத்து விபரங்களையும் “அவாஸ்ட் ஆன்டி வைரஸ்” (Avast Anti Virus) பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்து உள்ளது.

ஆன்டி வைரஸ் ஆனது நமது கணினியில் இணைய பாதுகாப்பிற்காகவும், வைரஸ் ஊடுருவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமான அவாஸ்ட் ஆன்டி வைரஸ் நிறுவனம் தனது பயனர்களின் ப்ரவுஸிங் ஹிஸ்டரிகளை மற்ற நிறுவங்களுக்கு விற்று வருமானம் பார்ப்பதாக மதர்போர்ட் மற்றும் பி.சி.மேக் என்ற பிரபல நிறுவன ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஹிஸ்டரி முதல் ஜி.பி.எஸ்.,வரை..!

அவாஸ்ட் ஆன்டி வைரஸ் நமது கம்ப்யூட்டரின் ப்ரவுஸிங் ஹிஸ்டரி முதல் ஜி.பி.எஸ் (நாம் எங்கெங்கு செல்கிறோம் போன்ற விபரம்) போன்ற அனைத்தையும் சேகரித்து வைத்து உள்ளதாகவும் அதனை தனது துணை நிறுவனமான ஜம்ப்ஷாட் கம்பெனியின் மூலம் கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Terms அண்ட் Conditions பிரச்சனை..!

இந்த தகவல்கள் அனைத்தையும் நம்முடைய அனுமதி உடனே இந்த நிறுவனம் சேகரித்து வைத்துள்ளதாகவும் அதாவது, Terms and Conditions என்ற வகையில் இது பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர்களும் அதை கவனிக்காமல் ஓகே கொடுப்பதால் அதனை பயன்படுத்தி இந்த நிறுவனம் இந்த சேகரிப்பில் ஈடுபடுகிறது.

இதனால் என்ன லாபம்..!

பயனர்களின் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் தனது மார்க்கெட்டிங் திட்டங்களை வகுத்துக் கொள்கின்றன. எந்த நேரத்தில், எந்த இணையதளத்திற்கு செல்கிறோம், எந்த வார்த்தைகளை வைத்து தேடுகிறோம், எதை கிளிக் செய்கிறோம் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ‘ஆல் கிளிக்ஸ் பீட்’ என்ற பேக்கேஜ்கள் தான் அதிமுக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி எந்த இடத்தில் எவ்வாறு விளம்பரம் செய்வது போன்ற முறைகளை நிறுவனங்கள் வகுத்துக் கொள்கின்றன.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

ரூ. 15.8 கோடி…!

நியூயார்க்கை சேர்ந்த மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்னிகான் மீடியா குரூப்ஸ், 2019ம் ஆண்டு சில வலைதளங்களின் விவரங்களை 20.75 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14.8 கோடி) விலைக்கு (ஆல் கிளிக்ஸ் பீட்) பேக்கேஜை வாங்கியுள்ளது. மேலும் 2020ம் ஆண்டு ரூ.15.8 கோடிக்கும், 2021ம் ஆண்டு ரூ.16.2 கோடியாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here