கொரோனா நோயாளிகளை தாக்கும் அவஸ்குலர் நெக்ரோசிஸ்… வெளிவந்த பகிர் தகவல்!!

0

தற்போது கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சில பேருக்கு அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற புதிய நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவஸ்குலர் நெக்ரோசிஸ் (Avascular Necrosis) என்பது எலும்புக்கு இரத்த ஓட்டம் குறைதல் அல்லது குறுக்கீடு செய்வதன் விளைவாக ஏற்படும் எலும்பு திசுக்களின் மரணம் ஆகும். காயங்கள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் அனைத்தும் இந்த அறிகுறியை ஏற்படுத்தும். அவஸ்குலர் நெக்ரோசிஸ் இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கை அல்லது பாதத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.

 

இதில் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் தற்போது கொரோனாக்கு சிகிச்சை எடுத்து மீண்ட நோயாளிகளை இந்த நோய் தாக்குகிறது. இந்த அவஸ்குலர் நெக்ரோசிஸ் நோய் பாதிப்பு மும்பையில் கொரோனவிலிருந்து மீண்ட 3 நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை என விதவிதமாக தொற்று பாதிப்பு ஏற்படும் போது இந்த அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற புதிய நோய் பாதிப்பு அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here