ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் – பிப்ரவரி 2021க்கு தள்ளிவைப்பு!!

0

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரை வரும் ஜனவரி 2021இல் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைப்பதாக போட்டி குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் கிராண்ட்சிலாம் போட்டிகள் மிகவும் பிரமாண்டமாக ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்று வரும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக வெறும் 3 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. அதுவும் அவர்கள் குறிப்பிட்டிருந்த தேதியில் அவர்களால் நடத்த இயலவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜனவரி 2020இல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் செர்பிய நாட்டை சேர்ந்த ஜோகோவிச் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சோபியா சாம்பியன் பட்டத்தை பெற்றனர். அதற்கு பின் நடந்த அமெரிக்க ஒபெனில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை பெற்றனர். அதன் பின் நடந்த பிரெஞ்சு ஓபனில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த இகா சுவாடெக் சாம்பியன் பட்டம் பெற்றனர். இந்த ஆண்டு இந்த 3 போட்டிகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரிக்கு தள்ளிவைப்பு:

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வைத்து வரும் ஜனவரி 18 முதல் 31 வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் 2வது அலை ஆரம்பித்து வருவதால் இதனை பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியாவை வெல்ல விராட் கோஹ்லியின் ‘மாஸ்டர் பிளான்’!!

அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கத்தார் தலைநகர் ஜோகோவில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here