சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.., இது தான் காரணமா!!!

0
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.., இது தான் காரணமா!!!
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.., இது தான் காரணமா!!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் T20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்து 2015ம் ஆண்டு உலகக்கோப்பையும், 2021ம் ஆண்டு T20 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று T20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் நடந்த T20 உலக கோப்பையில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தது.

player of the month: ஐசிசியின் சிறந்த வீராங்கனை இந்த மூவரில் யார்??

இதைத்தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில், “2024ம் ஆண்டு நடைபெற உள்ள T20 உலக கோப்பை போட்டியில் நான் விளையாட முடியாது என நினைக்கிறேன். எனவே இனிமேல் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வலிமையான கேப்டனை தேர்ந்தெடுக்க இதுவே சரியான தருணம். அதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here