உலக கோப்பை தொடருக்கான முதல் அணி அறிவிப்பு…, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியீடு!!

0
உலக கோப்பை தொடருக்கான முதல் அணி அறிவிப்பு..., ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியீடு!!
உலக கோப்பை தொடருக்கான முதல் அணி அறிவிப்பு..., ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியீடு!!

வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் ஐசிசி சார்பாக இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு, இன்னும் 2 மாதங்களே உள்ளதால் சர்வதேச அணிகள் அனைத்தும் உலக கோப்பையை வெல்ல வேண்டி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், இந்த உலக கோப்பை தொடருக்கான அணிகளை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, உலக கோப்பைக்கான முதல் அணியை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 18 வீரர்கள் கொண்ட உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ் வழி நடத்த உள்ளார். மேலும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

IND vs WI: தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா…, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!!

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (சி), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலீஷ், மிட்செல் மார்ஷ், தன்வீர் சங்கா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here