ரோபோவை திருமணம் செய்யும் நபர் – காதலுக்கு கண்ணு தான் இல்லை.. இப்படி பொண்ணுமா இல்லாம போச்சு!!

0

ஆஸ்திரேலியாவில் உள்ள ஜியாஃப் காலாகர் என்ற நபர் தான் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவை காதலிப்பதாகவும், விரைவில் அதை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோவுடன் திருமணம் :

இதுவரை மனித சமூகத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் திருமணம் நடந்து வந்தது. தற்போது, இதில் ஒரு புதுமையாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் தான் ஒரு ரோபோவை காதலிப்பதாகவும், அதனையே தான் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஜியாஃப் காலாகர் என்ற ஒரு நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது தாயை இழந்துள்ளார்.

அதன் பிறகு, தனிமையில் வாடிய அவர், கடந்த 2019ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவை வாங்கி தன் வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார். தற்போது, இவர் இந்த ரோபோவை காதலித்து வருவதாகவும், விரைவில் தான் அதை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வினோத அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக அரங்கில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here