உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா!!

பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் மோதி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டிராபியில், முதல் இரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாகியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, 3 வது டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி வென்றால், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் நிலை இருந்தது. ஆனால், இந்த 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் பின்னடைவை சந்தித்துள்ளது.

IND vs AUS 3rd Test: 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா…, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!!

ஆனால், ஆஸ்திரேலிய அணியோ, இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஏதேனும் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இருந்தது. தற்போது, இந்திய அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியை வென்று, ஆஸ்திரேலிய அணி 68.52%-துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here