பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே.. ஆனாலும் என்ன பிரயோஜனம்.., தொடர் பறிபோனதே!

0
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே.. ஆனாலும் என்ன பிரயோஜனம்.., தொடர் பறிபோனதே!
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே.. ஆனாலும் என்ன பிரயோஜனம்.., தொடர் பறிபோனதே!

ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி திரில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

3 வது ஒரு நாள் போட்டி!

ஜிம்பாவே மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வந்தது. இதற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஜிம்பாவே அணியை ஒயிட்வாஷ் செய்யுமா என அனைவரும் நினைத்தனர். ஆனால் போட்டியில் அப்படியே தலைகீழாக மாற்றம் ஏற்பட்டது. அதாவது தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஜிம்பாப்வே அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இந்த மூன்றாவது போட்டியில் டாஸ் என்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மட்டும் 94 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவர் பின் களம் இறங்கிய மற்ற வீரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறி ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி இந்த இலக்கை தாண்டுமா என அனைவரும் நினைத்த வேளையில் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

அதன்படி இந்த அணியில் உள்ள தகுத்ஸ்வநாஷே கைதானோ, ரெஜிஸ் சகாப்வா ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 142 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற போதிலும் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here