
எதிர்வரும் உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, சர்வதேச அணிகள் அனைத்தும் மற்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றன. இந்த வகையில், ஒருநாள் உலக கோப்பையை அதிக முறை வென்ற அணியான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மங்காங் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49 ஓவரில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய, ஆஸ்திரேலிய அணி 40.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வீழ்த்தி உள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய என்பது குறிப்பிடத்தக்கது.