விறுவிறுப்பான ஆட்டம் சமனில் முடிவு…, 7 வது முறையாக கோப்பையை பிரிந்து கொண்ட அணிகள்!!

0
விறுவிறுப்பான ஆட்டம் சமனில் முடிவு..., 7 வது முறையாக கோப்பையை பிரிந்து கொண்ட அணிகள்!!
விறுவிறுப்பான ஆட்டம் சமனில் முடிவு..., 7 வது முறையாக கோப்பையை பிரிந்து கொண்ட அணிகள்!!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர், கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 4 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகித்திருந்தது. இந்த தொடரை சமன் செய்யும் முனைப்பில் 5வது போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களை குவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுக்க, 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்த 2வது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 395 ரன்களை குவித்தது. இதையடுத்து, 383 ரன்களை சேஸிங் செய்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்து 334 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி 5 வது போட்டியை வென்றதுடன் தொடரையும் 2-2 என சமன் செய்தது. இதன் மூலம், 73 முறை விளையாடப்பட்ட இந்த ஆஷஸ் தொடர் 7 வது முறையாக சமனில் முடிந்துள்ளது. இதில், ஆஸ்திரேலியா 34 முறையும், இந்தியா 32 முறையும் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரை வெல்லும் கடைசி யுத்தத்தில் IND vs WI…, வெற்றி வாகை சூட போவது யார்??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here