AUS vs ENG: 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து…, தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்!!

0
AUS vs ENG: 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து..., தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்!!
AUS vs ENG: 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து..., தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்!!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது, 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

AUS vs ENG:

டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணியானது, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி, சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களில், டேவிட் வார்னர் 16, டிராவிஸ் ஹெட் 19 ரன்களில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே அதிரடி காட்ட தொடங்கினர். இவர்களில், ஸ்டீவ் ஸ்மித் 94, மார்னஸ் 58 மற்றும் மிட்செல் மார்ஷ் 50 ரன்கள் என வரிசையாக ரன் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்களை எடுத்திருந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்…, அடித்து கூறிய அஸ்வின்!!

இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, மிட்செல் மார்ஷ் மற்றும் ஆடம் ஜம்பா இவர்களின் அசத்தலான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. இதில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ் 60, சாம் பில்லிங்ஸ் 71 மட்டுமே எதிரணியின் பந்து வீச்சை தங்குப்பிடித்தனர். இதனால், இங்கிலாந்து அணி 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 208 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம், தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here