T20 உலக கோப்பை தொடர் – ஆப்கானிஸ்தான் அணி விபரங்கள் வெளியீடு!!

0
T20 உலக கோப்பை தொடர் - ஆப்கானிஸ்தான் அணி விபரங்கள் வெளியீடு!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த ஆர்வத்தை தூண்டும் விதமாக பல நாடுகள் தங்களின் அணிகளின் விபரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த டீம்முக்கு முகமது நபி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சோகமாக விஷயம் என்னவென்றால் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, கரீம் ஜனத் மற்றும் நூர் அகமது ஆகிய வீரர்கள் உலக கோப்பையில் இடம் பெறவில்லை.

இவர்களுக்கு பதில் இளம் வீரர்களான தர்வீஷ் ரசூலி, கைஸ் அகமது மற்றும் சலீம் சஃபி ஆகியோர் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை தொடருக்கான முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ள T20 உலகக்கோப்பை அணியே அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரிலும் பங்கேற்கும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி :

முகமது நபி (கேப்டன் ), நஜிபுல்லாஹ் சத்ரான் (கேப்டன் ), ரஹ்மானுல்லா குர்பாஸ் , அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, பரித் அஹ்மத் மாலிக், பசல் ஹக் பரூக்கி, ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், இப்ராஹிம் சத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மத், குயீன் ரஹ்மான்,ரஷீத் கான், சலீம் சபி, உஸ்மான் கனி.

காத்திருப்பு வீரர்கள் : அப்சர் ஜசாய், ஷராபுதீன் அஷ்ரப், ரஹ்மத் ஷா, குல்பாடின் நைப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here