ஒரே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு…, இந்திய வாரிய துறை வெளியிட்ட புள்ளி விவரம் இதோ!!

0
ஒரே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு..., இந்திய வாரிய துறை வெளியிட்ட புள்ளி விவரம் இதோ!!
ஒரே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு..., இந்திய வாரிய துறை வெளியிட்ட புள்ளி விவரம் இதோ!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவையானது அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், ஏசி, வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதில், குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மின் நுகர்வு பயன்பாடு வழக்கத்தை விட 16 சதவீதம் அதிகரித்து உள்ளதாக இந்திய மின் நுகர்வு துறை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, தோராயமாக ஒரு நாள் மின் நுகர்வு கடந்த ஜூன் மாதத்தில் 223.29 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 208.95 ஜிகாவாட்டாக குறைந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் மின் நுகர்வானது 236.59 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 2022 ஆகஸ்ட் 195.22 ஜிகாவாட், 2021 ஆகஸ்ட் 196.27 ஜிகாவாட்டுகளுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகரித்து உள்ளது என இந்திய மின் நுகர்வு துறை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது. கோடை காலம் முடிந்த நிலையில், இனி வரும் மாதங்களில் சீரான மின்சாரத்தின் தேவை இருக்கும் என எதிர்பார்ப்பதாக மின் நுகர்வு துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த கட்டணம் தாறுமாறாக உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here