தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்.., முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்.., முக்கிய அறிவிப்பு!!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்.., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் காலை சிற்றுண்டி திட்டம். இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவ மாணவியர்களின் வருகை அதிகரித்ததால், இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் மூத்த அதிகாரி பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அவர் பேசியதாவது, மகளிர் சுயஉதவிக் குழுக்களை பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சமையல் பாத்திரங்களை நாங்களே வழங்கியுள்ளோம். இப்பொழுது சமையலறைகள் தயாராக இருக்கின்றன. இந்த திட்டத்தை நாகப்பட்டினத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

ரேஷன் அட்டைதாரர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!

முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.மேலும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறிகளுடன் சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும். வாரத்திற்கு இரண்டு முறை சிறு தானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here