தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., இனி இதுவும் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு இதோ!!!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., இனி இதுவும் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு இதோ!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பொது தேர்வை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளன.
அதன்படி பள்ளி வகுப்புகள் முடிந்த பின்னர் மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளது. ஆனால் இந்த சிறப்பு வகுப்புகளால் மாணவர்களுக்கு பசி ஏற்படுவதால் படிப்பின் மீது கவனம் இல்லாமல் போய்விடும். இதனால் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here