ஏடிஎம்மில் பண பரிவர்த்தனைக்கான கட்டணம் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அதிர்ச்சி !!!

0
ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்த்தப்பட்ட ATM பரிவர்த்தனை கட்டணம்.. பொது மக்கள் அதிருப்தி!

ஏடிஎம் மிஷின்கள் பயன்படுத்துதல்  மற்றும் வங்கிகளால் ஏற்படும் பராமரிப்பு  செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி ஏடிஎம் கட்டணங்களை முழுவதும் மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி 2019 ஜூன் மாதம் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் அடிப்படையில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைபை  கடைசியாக  ஆகஸ்ட் 2012 லும், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கடைசியாக ஆகஸ்ட் 2014 லும் மாற்றியமைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது தான் இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டு  சொந்தமில்லாத ஏடிஎம்மில் பரிவர்த்தனை செய்யும்போது, அந்த கார்டு உள்ள   வங்கி ஏடிஎம் ஆபரேட்டருக்கு ஒரு பரிமாற்ற கட்டணத்தை செலுத்துகிறது. தற்போது, அந்த கட்டணம்   நிதி பரிவர்த்தனைகளுக்கு முதலில் ரூ.15 வசூலிக்கப்பட்டது. இது தற்போது ரூ.17 ஆக உயர்த்தியுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டண அமைப்பு 2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் ஒரு வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து செய்ய தகுதியுள்ள இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தாண்டிய ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த  கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 லிருந்து ரூ.21ஆக வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும் என கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் Enewz Tamil :

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here