ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்த்தப்பட்ட ATM பரிவர்த்தனை கட்டணம்.. பொது மக்கள் அதிருப்தி!

0
ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்த்தப்பட்ட ATM பரிவர்த்தனை கட்டணம்.. பொது மக்கள் அதிருப்தி!

இந்தியாவில் பொது மக்கள் அனைவரும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஏடிஎம் கார்டு பண பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உயரும் பரிவர்த்தனை கட்டணம்:

உலகில் வாழும் மக்கள் அனைவரும் காலத்திற்கு ஏற்ப மாறுவது போன்று நம் செய்யும் வேலைகளும் மாறி வருகின்றன. தற்போது நாம் செய்யும் எல்லா வேலைகளையும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே செய்கிறோம். அதில் குறிப்பாக வங்கி பண பரிவர்த்தனைகள் ஒன்றாகும். அதே சமயம் அதிகமான மக்கள் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 5 முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் பண பரிவர்த்தனை கட்டணம் நேற்று முதல் (ஆகஸ்ட் 17) உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வங்கி வாடிக்கையாளர்கள் மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறையும் பிற நகரங்களில் 5 முறையும் இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவ்வாறு 5 முறைக்கு மேல் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தால் 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தமாக 21 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வங்கியை பொறுத்து கட்டணம் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here