பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ராக் ஸ்டார் இசையமைத்துள்ள இந்த படம் வெளியான நாளில் இருந்து வசூலை வாரி குவித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படம் மூலம் அட்லீயின் மார்க்கெட் எங்கேயே சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் அட்லீ. அதுவும் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனுடன் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லீயின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது இந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.