‘இனி எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்’…,பாலிவுட்டிலும் தொடரும் அட்லீயின் சாதனை….,

0
'இனி எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்'...,பாலிவுட்டிலும் தொடரும் அட்லீயின் சாதனை....,
'இனி எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்'...,பாலிவுட்டிலும் தொடரும் அட்லீயின் சாதனை....,

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. மாஸ், ஆக்ஷன், காதல் போன்றவற்றை மையமாகக் கொண்டு இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெறுவது உண்டு. இப்படி இருக்க, இயக்குனர் அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல்வேறு கோலிவுட் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. பக்கா ஆக்ஷன் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 129.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஹிந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற சாதனைப் படைத்துள்ளது ‘ஜவான்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here