இனி பழைய அதிதியை பார்க்க முடியாது.., இனிமேல் இந்த மாதிரி தான்.., வெளியான அதிரடி அப்டேட்!!

0

சங்கரின் மகளும் அறிமுக நாயகியுமான அதிதி பற்றிய முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அவரின் இரண்டாவது படமான மாவீரன் படத்தை பற்றி தான் இணையத்தில் செய்திகள் ஓடி கொண்டுள்ளது. விருமன் படத்திற்கு பிறகு அதிதி புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது அந்த மொக்க ஜோக், சிங்கிங், அவரது குறும்புத்தனம் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர வைத்தது. முதல் படத்திலேயே ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்கி விட்டார் அதிதி. மேலும் அவருக்கு பாடுவதில் வேறு அதிக ஆர்வமுள்ளதால் அந்த பீல்டிலும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Aditi Shankar joins Sivakarthikeyan-Madonne Ashwin's Maaveeran- Cinema express

யூடியூப்பை திறந்தாலே அதிதியின் இன்டெர்வியூ தான். அந்த அளவிற்கு பேமஸாகி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவர் நடிக்க இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த படத்தில் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக இருக்கிறாராம். கிராமத்து பெண்ணாக விருமன் படத்தில் இருந்த அவர் இப்படி ஒரு கோணத்தில் காட்சியளிக்கவுள்ளார். அப்போ அடுத்து கிராமத்து கெட்டப்ல உங்கள எப்போ பார்க்குறது என்று ரசிகர்கள் ஏங்கி தான் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here