அதிதி சங்கரிடம் காதலை கூறிய காமெடி நடிகர் – திருமணம் நடக்கலைனா கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்!

0

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் இன்று (12-08-2022) திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் விருமன். இப்படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்னர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது வெற்றிகரமாக வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் காட்சியை பார்த்துவிட்டு பிரபல காமெடி நடிகர் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியுள்ளார். அதாவது காக்க காக்க, குசேலன் உள்பட தமிழ் படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கூல் சுரேஷ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விருமன் படத்தின் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்த கூல் சுரேஷ், ‘சங்கரின் மகளைப் பார்க்கத் தான் வந்தேன். ஷங்கர் சார்… அதிதியைக் காதலிக்கிறேன். நீங்கள் பெரிய இடம். ஆனால் நான் ஏழை தான். திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்’ எனப் பேனரை காட்டி கூறியுள்ளார். படங்கள் தாண்டி கூல் சுரேஷ் தான் வெளியிட்டு வரும் யூடியூப் வீடியோக்கள் மூலமும் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here