அதிதிக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுக்க இதான் காரணமா? பூகம்பமாய் வெடித்த புதிய பிரச்சனை!!

0
அதிதிக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுக்க இதான் காரணமா? பூகம்பமாய் வெடித்த புதிய பிரச்சனை!!
அதிதிக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுக்க இதான் காரணமா? பூகம்பமாய் வெடித்த புதிய பிரச்சனை!!

சிவகார்த்திகேயன் நடித்து வரும், மாவீரன் படத்தில் அதிதி சங்கருக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுக்க, இதுதான் காரணம் என youtube விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வதந்தி ஒன்றை கிளப்பியுள்ளார்.

பிரபலம் பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டான் திரைப்படத்தை தொடர்ந்து, மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக, ஷங்கரின் மூத்த மகள் அதிதியை கமிட் செய்துள்ளார். அதிதி கார்த்தியின் விருமன் படத்தில், கெட்டிக்காரத்தனமாக ஸ்கோர் செய்ததால் தான், சிவகார்த்திகேயன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது என பலரும் பேசி வந்தனர்.

ஆனால், சிவகார்த்திகேயனும் இயக்குநர் சங்கரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான், சிவா இந்த வாய்ப்பை அதிதிக்கு கொடுத்துள்ளார் என பிரபல youtube விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இவர் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து மோசமாக விமர்சித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் குறித்த இந்த சர்ச்சை பதிவு மீண்டும் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதை அடுத்து, பலரும் ரங்கநாதனுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here