பிரபல நடிகையின் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா? இனி இவர் காட்டுல மழை தான்!!

0
பிரபல நடிகையின் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா? இனி இவர் காட்டுல மழை தான்!!
பிரபல நடிகையின் மகளுக்கு ஜோடியாகும் அதர்வா? இனி இவர் காட்டுல மழை தான்!!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் ஜான்வி ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி கொடிகட்டிப் பறந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியும் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறாராம். இப்படி இருக்க, தமிழில் நடிகர் அதர்வாவை வைத்து உருவாக்கப்படும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குஷியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘மத்தகம்’ என்ற இணையத்தொடர் OTT இல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here