
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அதர்வா தற்போது புதிய படத்தில் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய கெமிஸ்ட்ரி எப்படி இருக்க போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க அமெரிக்காவில் தான் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.