ஆக்ஸ்ஃபோர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு – தென் ஆப்பிரிக்க அரசு முடிவு!!

0

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்துகளுக்கு தற்போது தற்காலிகமான தடை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்க அரசு.

கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு

கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அதிரவைத்தது. இந்த கொரோனா வைரஸால் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட நெருக்கடிகள் உருவானது. இந்த கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் வேலையில் உலக நாடுகள் ஈடுபட்டிருந்தது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுள் சில பயன்பாட்டிலும் இருக்கின்றன. இதை தொடர்ந்து 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஒருவகை புதிய உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாகுபலி பிரபாஸுக்கு விரைவில் டும் டும் டும் – பொண்ணு யாரு தெரியுமா??

அதிகமான பாதிப்புகளை உள்ளடக்கிய உருமாறிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் மிக வேகமாக பரவியது. இங்கிலாந்திலும் இந்த வகை வைரஸ் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வந்த இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி உகந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்துகள் கொரோனா தடுப்புக்கான பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனேகா மருந்து போதிய பலன் அளிக்காததால் அந்த தடுப்பு மருந்துகள் தென் ஆப்பிரிக்காவில் தற்காலிக பயன்பாட்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here